Asianet News TamilAsianet News Tamil

மு.க.ஸ்டாலின் கொடுக்கும் நெருக்கடி... சுய அடையாளத்தை இழக்கப்போகும் திமுக கூட்டணி கட்சிகள்..!

 கடந்த தேர்தலில் 41 சீட்டுக்கள் பெற்ற காங்கிரஸ், தனது வாக்கு வங்கி 8 சதவிகிதமாக அதிகரித்து விட்டதாக காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு வரும் நிலையில் 60 சீட்டுக்கள் வேண்டும் என பிடிவாதம் காட்டி வருகிறது. இந்நிலையில் 30 சீட்டுகளுக்கு உடன்படுமா என்பது சந்தேகமே. 

The crisis that MK Stalin is giving ... DMK alliance parties that will lose their identity
Author
Tamil Nadu, First Published Sep 18, 2020, 10:30 AM IST

கூட்டணி கட்சிகளுக்கு ஒரு எம்.பி தொகுதிக்கு 3 சட்டமன்ற தொகுதி ஒதுக்கலாம் எனக்கூறி இருக்கிறார் பிரஷாந்த் கிஷோர். ஆனால் மு.க.ஸ்டாலின்  கணக்கு போட்டு, காங்கிரஸுக்கு 10 எம்.பி சீட். அப்படியானால் 30 சீட்.  மதிமுகவுக்கு ஒரு லோக் சபா, ஒரு ராஜ்யசபா ஆக 6 சீட், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6, ரெண்டு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா ஆறு வீதம் 12, முஸ்லிம் லீக் 3, பாரிவேந்தருக்கு 3, கொங்கு ஈஸ்வரன் கட்சிக்கு 3  எனக் கணக்குப் போட்டால் கூட 63 வந்துவிடுகிறது.

 The crisis that MK Stalin is giving ... DMK alliance parties that will lose their identity

இதில் மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹருல்லா வேறு இருக்கிறார். காங்கிரஸ் கட்சி தவிர்த்து மதிமுகவுக்கும், விடுதலை சிறுத்தைகள், பாரிவேந்தர் உள்ளிட்ட கட்சிகளுக்கு அத்தனை சீட்டுகள் ஒதுக்குவது வீண். இந்த தேர்தலில் உதயசூரியன் சின்னம் அதிகபட்சம் 200 சீட்டில் நிற்க வேண்டும். நாம் கொஞ்சம் குறைத்துக் கொண்டாலும் கூட்டணிக் கட்சிகளில் சிலரை நமது சின்னத்தில் நிற்க வைக்கலாம். மீதம் உள்ள 34தான் கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு எதிர்பார்க்குற ரிசல்ட் கிடைக்கும். இதுக்கு உடன்படுகிறவர்கள் இருக்கலாம் என கறாராக கூறி விட்டாராம் மு.க.ஸ்டாலின். The crisis that MK Stalin is giving ... DMK alliance parties that will lose their identity

ஆனால், கடந்த தேர்தலில் 41 சீட்டுக்கள் பெற்ற காங்கிரஸ், தனது வாக்கு வங்கி 8 சதவிகிதமாக அதிகரித்து விட்டதாக காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு வரும் நிலையில் 60 சீட்டுக்கள் வேண்டும் என பிடிவாதம் காட்டி வருகிறது. இந்நிலையில் 30 சீட்டுகளுக்கு உடன்படுமா என்பது சந்தேகமே. 

அதேபோல், தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளில் காங்கிரஸை மற்ற கட்சிகளின் வேட்பாளர்களை தங்களது உதயசூரியன் சின்னத்தில் மட்டும் தான் போட்டியிட வேண்டும் எனவும் நிர்பந்திக்க உள்ளது திமுக தலைமை. ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விருப்பமில்லை என்று தகவல்.

 The crisis that MK Stalin is giving ... DMK alliance parties that will lose their identity

தேர்தலுக்கு பிறகு ஒருவேளை தொங்கு சட்டசபை உருவானால், தி.மு.க., கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ., இழுத்து விடும் வாய்ப்பு அதிகம். அதை தவிர்க்கவே, கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க தி.மு.க., விரும்புகிறது. ஆனால், கட்சியின் அங்கீகாரம், தனிப்பட்ட செல்வாக்கு உள்ளிட்ட பிரச்னைகள் கூட்டணி கட்சிகளுக்கு இருப்பதால் தங்களது எதிர்காலத்தை அடகு வைத்துவிட்டு திமுக தலைமைக்கு தலைசாய்க்குமா என்பது கேள்விக்குறி. இதனால் திமுக மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றன அதன் கூட்டணி கட்சிகள்.

Follow Us:
Download App:
  • android
  • ios