The court has filed a petition in the Madras High Court to ban Mersal film with the GST vs. Opinion.

ஜிஎஸ்டி எதிராக கருத்துகளை கொண்ட, விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்ட படம் மெர்சல். இப்படம் தடைகள் பலவற்றைக் கடந்து தீபாவளியன்று வெளியாகியது. 

தற்போது பல்வேறு வசூல் சாதனைகளையும் இப்படம் படைத்து வருகிறது. இந்த படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். 

பாஜகவின் இத்தகைய கருத்திற்கு அரசியல், திரையுலகினர் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜிஎஸ்டி எதிராக கருத்துகளை கொண்ட, விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஏ.அஸ்வத்தாமன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.