கல்லூரி மாணவர்களுடன் ராகுல் காந்தி..! கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தடை...? அதிர்ச்சியில் காங்கிரஸ்..!
உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடல்
. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் போது அந்த கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து மாணவர்களுடன் உரையாடுவார். அப்போது மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பாளர். தமிழகத்தில் கூட பல்வேறு கல்லூரி நிகழ்வுகளில் ராகுல் காந்தி கலந்துகொண்டுள்ளார். இதே போன்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியானது தெலுங்கானாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு தான் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. தெலுங்கானாவில் வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலை தேர்தலை சந்திக்க இப்போதில் இருந்தே ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, பாஜக, காங்கிரஸ் இடையே போட்டா போட்டி நிலவி வருகிறது
அனுமதி மறுத்த நீதிமன்றம்
இந்தநிலையில் இரண்டு நாட்கள் சுற்றுபயணமாக ஹைதராபாத் வரும் காங்கிரஸ் எம்பியும் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, தெலங்கானா மாநில போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த உஸ்மானியா பல்கலை. மாணவர்களின் குடும்பத்தாரை சந்திக்கிறார். இதனிடையே உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்கு சென்று, தெலங்கானாவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து வருகிற 7 ஆம் தேதி (மே மாதம் )மாணவர்களுடன் கலந்துரையாட இருந்தார்.
இதற்கு அந்த பல்கலைக்கழகம் அனுமதி வழங்காமல் இருந்துள்ளது. இதனையடுத்து நீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவர்கள் உரையாடல் நிகழ்வுகளில் அரசியல் சாயம் இல்லையென்று கூற முடியாது என தெரிவித்தது. மேலும் பல்கலைக்கழக வளாகத்தை அரசியல் தளமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த கூட்டத்திற்கு அனுமதி அளிப்பது பல்கலைக்கழக நிர்வாக குழு தீர்மானத்தை மீறும் செயல் எனக் கூறிய நீதிமன்றம், கல்லூரி வளாகத்தில் ராகுல் காந்தி மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்யும் நிகழ்ச்சியை நடத்த அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது.