உள்ளது. ஜெ.தீபா, தீபக் ஆகியோரை நீதிமன்றம் வாரிசாக தான் அறிவித்துள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த "வேதா" இல்லத்தை நினைவிடமாக பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றம் கூறவில்லை. கூடிய விரைவில் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாறும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தெக்ஷணமாற நாடார் சங்கம் சார்பில் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு பொது மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்... 
"தனக்கு என்று குடும்பம் அமைத்துக் கொள்ளமால் வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் வரிசையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனக்கென ஒரு குடும்பம் அமைத்துக் கொள்ளாமல் நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர் .இது மக்களுக்கும் தெரியும் என்றும், பல நேரங்களில் எனக்கு குடும்பம் கிடையாது.தமிழ்நாடு தான் எனது இல்லம், தமிழ்நாட்டு மக்கள் தான் என் மக்கள் என்று சொல்லி உள்ளார்.

ஜெயலலிதா, மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றினால் அனைத்து மக்களும் சென்ற காண முடியும் என்பதற்கதான் அரசு நடவடிக்கை மேற்கொண்டது என்றும், பொதுமக்கள் வேண்டுகோள் படி தான் நினைவு இல்லமாக மாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டார்.மக்கள் மனதில் நின்ற தலைவர்கள் காமராஜர், அண்ணா, ஆகியோர் வாழ்ந்த இல்லம், எம்.ஜீ.ஆர் அலுவலகம் ஆகியவற்றை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றி உள்ளது. ஜெ.தீபா, தீபக் ஆகியோரை நீதிமன்றம் வாரிசாக தான் அறிவித்துள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த "வேதா" இல்லத்தை நினைவிடமாக பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றம் கூறவில்லை,வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் முடிவு அடைந்த பின் முதல்வர் தீர்க்கமான முடிவு எடுப்பார் என்று கூறினார்.