பல மாதங்களாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்- அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில் இருவரும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர். இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பல மாதங்களாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்- அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில் இருவரும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர். இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உஜ்ஜல் புயான் பதவியேற்பு விழாவில் பகையை மறந்து ஆளுநரும் முதல்வரும் கலந்து கொண்டுள்ளனர். கவர்னர் உடனான பனிப்போர் காரணமாக முதல்வர் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், தனியாக நீதிபதியை சந்திப்பார் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில்இருவரும் ஓரே மேடையில் கலந்து கொண்டுள்ளார்.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர் மாநில முதல்வர்களுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழகத்தில் ஸ்டாலின் ஆர்.என். ரவி இடையே மோதல் இருப்பதுபோலவே தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கும் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் இடையே பனிப்போர் இருந்து வருகிறது. ஆளுநர் உரை இல்லாமலேயே சட்டமன்ற கூட்டத்தொடரை முதல்வர் சந்திரசேகர் ராவ் நடத்தியது இந்த மோதலுக்கு அச்சாரமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ஆளுநரின் அரசியலமைப்பு அதிகாரத்தை மாநில அவமதிப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
அதேநேரத்தில் ஆளுநர் தமிழிசை பாஜகவின் செய்தித் தொடர்பாளர் போல செயல்படுவதாக மாநில அமைச்சர்கள் பதில் விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையை மாநில அரசு புறக்கணித்தது, அன்று முதல் ஆளுநர் முதலமைச்சரும் இடையே கருத்து வேறுபாடு பெரும் விரிசலாக மாரியது. இதேபோல் ஏப்ரல் மாதம் ராஜ்பவனில் ஆளுநர் நடத்திய உகாதிக்கு முந்தைய விழாக்களை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார். அவருக்கு முறையாக அழைப்பு விடுத்தும் அவர் கலந்து கொள்ளவில்லை. இது ஆளுநருக்கு ஏமாற்றத்தையும் மனக்கசப்பை ஏற்படுத்தியது.இதேநேரத்தில் கலந்து கொள்ளாமைக்கு விளக்கமோ அல்லது முறையாக தகவலோ தெரிவிக்க வில்லை என தமிழிசை அப்போது புகார் கூறினார்.
இதையும் படியுங்கள்:”குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு கிராமத்துக்கு, இப்போ தான் மின்சார வசதி கிடைக்குது !”
அதேபோல் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான பிரகதி பவனில் நடைபெற்ற உகாதி கொண்டாட்டத்திற்கும் ஆளுநருக்கு முதலமைச்சர் அழைப்பு விடுக்கப்படவில்லை. இதற்கு முன்னதாக யாதாத்திரியில் வர லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள ஆளுநருக்கு மாநில அரசு அழைப்பு விடுக்கவில்லை, கடந்த பிப்ரவரி மாதம் சம்மக சாரலம்மா ஜாத்ராவில் கலந்துகொள்ள ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முலுகு மாவட்டம் மேடாரம் சென்றபோது அவருக்கு மாநில அரசு, அதிகாரிகள் வரவேற்பு கொடுக்கவில்லை என தமிழிசை அப்போது குற்றம் சாட்டினார்.
இதையடுத்து பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை நேரில் சந்தித்து மாநில அரசு ஆளுநருக்கு உரிய மரியாதை வழங்குவதில்லை என புகார் தெரிவித்தார். இதையடுத்து ஜூன் 10ஆம் தேதி ராஜ்பவனில் பிரஜா தர்பார் நடத்தி மக்களின் குறைகளை கேட்க தொடங்கினார் ஆளாநர், மாநில அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாக செயல்பட விரும்புவதாக கூறி நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார். அப்போது அவர் தனது வரம்பை மீறுகிறார் என மாநில அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அந்த குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார். அரசியலமைப்பு சட்டம் தனக்கு அனைத்து அதிகாரிகளையும் வழங்கியுள்ளபோது மக்களுக்கு சேவை செய்ய எனக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள்: இபிஎஸ்க்கு அதிகரிக்கும் ஆதரவு..! ஓபிஎஸ் அணியில் இருந்து தாவிய பொதுக்குழு உறுப்பினர்கள்

எனது செயல் அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறுபவர்கள் முதலில் அரசியலமைப்பு மதிக்க வேண்டும் என்றார். இப்படி மாநில ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே கடுமையான பனிப்போர் நீடித்து வந்த நிலையில் முதல் முறையாக தெலுங்கானா தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் ஆளுநருடன் முதலமைச்சர் சந்திரசேகரராவ் கலந்து கொண்டுள்ளார். அப்போது முதலமைச்சர் ராஜசேகர ராவ் ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். பின்னர் மேடையில் நீதிபதி புயானை வாழ்த்தி உரையாற்றினார். அதேபோல் புதிய தலைமை நீதிபதி ஆளுநர் ஆகியோருடன் மரபுப்படியான சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். முதலமைச்சர் ஆளுநர் இடையாயான இந்த திடீர் மாற்றம் தெலுங்கானா அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
