உங்களை நம்பி  நாசமாபோன தயாரிப்பாளர்களை வாழவைக்கிற வழி பாருங்க என நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துறை செயலாளருமான விந்த்யா கமலுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

 

`சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்... ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை. அவர் எப்போதும் வால் பிடிப்பார். 
எதிர் காலம் வரும். என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' என கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் எம்.ஜி.ஆரின் பாடலை பஹிவு செய்து இருந்தார்.  இதற்கு பதிலடி கொடுத்துள்ள அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும் நடிகையுமான விந்தியா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’உங்க உத்தமவில்லன் ஊத்திமூடின படம்னு ஊருக்கே தெரியும், பாத்துதான் தெரிஞ்சுகணும்னு அவசியமில்லை. அந்த மாறிதான் நீங்க டம்மியா முடிவு எடுக்க முடியாம அடிமை வேலை பாக்கற பிக்பாஸ்ம். விஜய் டிவிக்கு பார்வையாளர்களை ஏத்தறத விட்டுட்டு உங்களை நம்பி  நாசமாபோன தயாரிப்பாளர்களை வாழவைக்கிற வழி பாருங்க’’ எனத் தெரிவித்துள்ளார்.