நான் கேட்கிறேன் தமிழக மக்களின் நிதியை பெருக்கவா துபாய் சென்றிருக்கிறார். இல்லை கோபாலபுரம் நிதியை பெருக்க சென்றிருக்கிறார். குடும்பத்தை வளர்க்க, குடும்ப நிதியை பெருக்க முதல்வர் துபாய் சென்றுள்ளார். இவ்வாறு அண்ணாமலை பேசினார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குடும்பத்தை வளர்க்க குடும்ப நிதியை பெருக்கவே முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் குறித்து அண்ணாமலையின் இந்த விமர்சனம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தது அக்காட்சியையும், முதல்வர் ஸ்டாலினையும் பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துபாய் பயணத்தையும் அவர் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். துபாயில் நடந்து வரும் உலக கண்காட்சியில் தமிழக அரசு அரங்கு அமைத்து முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரடியாக துபாய் சென்றுள்ளார். தமிழக அரசின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஸ்டாலினின் துபாய் பயணத்தின் மர்மம் என்ன என்றும், தனது குடும்பத்தை வளர்க்க, குடும்ப நிதியை பெருக்க முதல்வர் துபாய் சென்று உள்ளார் என்றும் விமர்சித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து இன்று போராட்டம் நடைபெற்றது. அதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர், அதன் பின்னர் மேடையில் பேசிய அண்ணாமலை கூறியதாவது:- ஓட்டைப் பானையை வைத்துக்கொண்டு திமுக மாடல் என கூறி வருகின்றனர். அரசன் என்பவன் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என வள்ளுவர் கூறுகிறார், ஆனால் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை திமுக அரசு நிறைவேற்றவேயில்லை. தினம் தினம் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். கல்வி பட்ஜெட்டில் ஆசிரியர்களுக்கு சம்பளம் மட்டும் 84 சதவீதம் கொடுக்கப்படுகிறது. மீதி 16 சதவீதம் திமுக காரர்களுக்கு கமிஷனாக போகிறது.
இல்லம் தேடி கல்விக்கான நிதியை மத்திய அரசுதான் கொடுக்கிறது. ஆனால் தமிழக அரசை இந்த திட்டத்தை செய்வது போல பிம்பத்தை உருவாக்குகிறார்கள். இந்தியாவில் உள்ள மாணவர்கள் திறன் மேம்பாடு செய்வதற்காக Skill India திட்டம் செயல்பட்டு வருகிறது. ஆனால் நான் முதல்வன் திட்டத்தில் ஒரு மாணவருக்கு 1000 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது, புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டது என்பது போல இது உள்ளது. திருமண நிதி உதவித் தொகையாக தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் 50 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை நிதி கிடைத்தது. ஆனால் தற்போது 30 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் கிடைக்கும். யாரை ஏமாற்றுவதற்காக இந்த திட்டத்தை கொண்டு வந்தீர்கள்? மாணவிகளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ள 1000 நிதியை ஆண்- பெண் என இருபாலருக்கும் வழங்க வேண்டும். மாணவிகளை விட மாணவர்கள் குறைவான அளவே படிக்கும் நிலை உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு தாக்கல் செய்த 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மக்களை ஏமாற்றுவதற்கான பட்ஜெட், மதுரவாயில் இரட்டை அடுக்கு பாலத்தை திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்தது, ஆனால் தற்போது 5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் என்பது கோபாலபுரம் பட்ஜெட், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஏ.வா வேலு, துரைமுருகன், செந்தில்பாலாஜி ஆகியோரின் துறைகளுக்கு அதிகமாக பட்ஜெட் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் நோக்கம் அமைச்சர்களை திருப்தி படுத்ததான். பெட்டர் மாஸ் லைட்டை கவுண்டமணி-செந்தில் உடைப்பது தான் பிடிஆரைப் பார்த்தால் எனக்கு தோன்றுகிறது. நான் கேட்கிறேன் தமிழக மக்களின் நிதியை பெருக்கவா துபாய் சென்றிருக்கிறார். இல்லை கோபாலபுரம் நிதியை பெருக்க சென்றிருக்கிறார். குடும்பத்தை வளர்க்க, குடும்ப நிதியை பெருக்க முதல்வர் துபாய் சென்றுள்ளார். இவ்வாறு அண்ணாமலை பேசினார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
