The Cauvery ownership team took part in the fight against the Chief Minister Edappadi in Tiruvarur.
திருவாரூரில் முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி காவிரி உரிமைமீட்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதுகுறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்குவதில் தடை இல்லையென்றால் கர்நாடகா, காவிரியில் புதிய அணை கட்ட எந்த எதிர்ப்பும் இல்லை என தமிழக வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்நிலையில், காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததற்கு காவிரி உரிமை மீட்பு குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று தஞ்சை திருவாரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த முதலமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டி காவிரிஉரிமை மீட்புக்குழு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசாரும் போராட்ட குழுவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
