Asianet News TamilAsianet News Tamil

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ரத்து..? அடுத்து என்ன...? இன்று மீண்டும் விசாரணை..

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது.

The case related to the urban local body elections in Tamil Nadu will be heard again in the High Court today
Author
Tamilnadu, First Published Jan 24, 2022, 9:50 AM IST

தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில்,தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

The case related to the urban local body elections in Tamil Nadu will be heard again in the High Court today

கொரோனா தொற்று தற்போது  உச்சத்தில் இருப்பதாலும்,தேர்தல் நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்டும் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை,கடந்த ஜனவரி 21 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி மனுதாரர் தரப்பில் ஆஜரான  மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் ஆஜராகி வாதிட்டபோது குறுக்கிட்ட நீதிபதிகள், தேர்தல் அறிவிப்பாணையை ஜனவரி 27-க்குள் வெளியிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதே எனக் கூறினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் மாநில சூழலை பொருத்து தேர்தல் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டே அனுமதி அளித்துள்ளது என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

The case related to the urban local body elections in Tamil Nadu will be heard again in the High Court today

இதனைத் தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.சிவசண்முகம் என்பவர் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பை 4 மாதத்தில் வெளியிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்படி,தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கான கால அவகாசம் ஜனவரி 27-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதே சமயம்,கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையுடன் தேர்தல் நடத்த கடந்த ஆண்டு டிசம்பரில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் போன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்பட்டு,முழு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன்  தேர்தல் நடத்தப்படும் என்றார். இதற்கிடையில், தேர்தலை ஒத்திவைக்க கோரி நக்கீரன் அல்லாமல் பிற தரப்பினரும் மனுதாக்கல் செய்துள்ள நிலையில்,அவர்களது தரப்பிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து,இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜனவரி 24 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

The case related to the urban local body elections in Tamil Nadu will be heard again in the High Court today

எனினும்,இந்த இடைப்பட்ட காலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்க சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios