தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தல்வி மற்றும் 6 நிர்வாகிகள் மீது கொலை அல்லாத மரணத்தை ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். சுமார் 2 ஆயிரம்பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா ஆசாத் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் புதிதாக ஐபிசி 306 பிரிவின் கீழ் குற்றச்சாட்டு சேர்க்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

 ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தல்வி உள்ளிட்டோர் மீது ஜாமீனில் வெளிவர தக்க பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. பேரிடர் தடுப்பு சட்டம் மற்றும் தொற்று நோய்த் தடுப்பு சட்டம் அமலில் இருந்த போதும் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் தப்லீக் ஜமாஅத் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்ற அடிப்படையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவர்கள் மீது கொலை அல்லாத மரணத்தை ஏற்படுத்தும் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.