அ.தி.மு.க., வழிகாட்டுதல் குழுவில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களான மதுரை, முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ., மாணிக்கம் இடம் பிடித்திருக்கிறார்கள்.

 

இதில், மாணிக்கத்துக்கு இடம் கிடைத்ததற்கு ஒரு பின்னணி இருக்கிறது. 2011 தேர்தலுக்கு முன் தி.மு.க., ஆட்சி இருந்தது. அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா, மதுரையில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தை நடத்த இடம் தேர்வு செய்ய, பன்னீர்செல்வம் மதுரையில் முகாமிட்டிருந்தார். அப்போது தென்மாவட்டங்களில் மு.க.அழகிரியின் அராஜாகம் பருபயங்கரமாக இருந்தது. ஆளுங்கட்சியாக இருந்த திமுகவின் மிரட்டலுக்கு பயந்து, யாருமே இடம் தரமுன்வரவில்லை. 

அப்போது மாணிக்கம், தனக்கு சொந்தமான பாண்டி கோவில் ரிங் ரோடு பக்கத்தில் இருந்த நிலத்தை, ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுக்க முன் வந்தார். ஆட்சி மாற்றத்துக்கே அந்த கூட்டம்தான் காரணமாக இருந்தது. சோழவந்தான் தொகுதிக்கு சீட் கேட்டு ஒருவர் டி.டி.வி.தினகரன் மாமியார் மூலமாக காய் நகர்த்தினார். ஆனால், மாணிக்கத்தை அழைத்துச் சென்ற ஓ.பி.எஸ் ஜெயலலிதாவிடம் சீட் வாங்கிக் கொடுத்து சோழவந்தான் தொகுதியில் வெற்றி பெற வைத்தார். 

அதை மனதில் வைத்தே இப்போதும் அதிமுக வழிகாட்டுதல் குழுவில் மாணிக்கத்துக்கு, பன்னீர்செல்வம் இடம் வாங்கி கொடுத்திருக்கிறார். பழசை மறக்காதவர் ஓ.பி.எஸ் என இந்த விவரத்தை அறிந்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.