தமிழகத்தில் திராவிட கட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், பாஜகவின் சதிக்கு அதிமுகவினர் இரையாகிவிடக் கூடாது என்றும் மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

சென்னையில், எம்.எல்ஏ.க்கள் விடுதி வளாகத்தில், எம்எல்ஏ தமிமுன் அன்சாரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் திராவிட கட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். பாஜக, அதிமுகவை பிளவுபடுத்தி உள்ளது என்பது தமிழகத்தின் சாமானிய மக்களும் கூறுகின்றனர். தமிழகத்தன் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சமூக  நீதி பாதுகாக்கப்பட வேண்டும்.

தற்போது அதிமுகவை பிறவுபடுத்தும் பாஜகா, நாளை திமுக..., இதன் பின் தமிழ்நாடும் பாஜக ஆகிவிடக் கூடாது. அதிமுக தலைவர்கள் தங்கள் ஈகோவை கைவிட்டுவிட்டு ஒன்றுபட வேண்டும் என்று பத்திரிகையாளர் சங்கம் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இதுவே தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

அதிமுகவின் தலைவர்க யார் வர வேண்டும் என்பதை வெளியில் இருந்து யாரும் தீர்மானிக்கக் கூடாது. இப்போதும் காலம் கெட்டுப்போகவில்லை. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைத்து பேசி சுமூகமாக நடத்த
வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். அதிமுகவினர் பாஜகவின் சதிக்கு இரையாகிவிடக் கூடாது.