அரசியல் விமர்சகர் மாரிதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மதுரை இல்லத்திற்கு சென்று பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியாக திமுக, காங்கிரஸ் கட்சிகளின் உண்மைகளை தோலுரித்து காட்டுபவர் அரசியல் விமர்சகரான  மாரிதாஸ்.  ரஜினிகாந்துக்காகவும் களமிறங்கி பல வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். ரஜினி அரசியலை விட்டு விலகியதும் இனி வீடியோக்களை வெளியிட மாட்டேன் எனத் தெரிவித்த அவர், மீண்டும் திமுக- காங்கிரஸை தோலுரித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் உள்ள மாரிதாஸின் இல்லத்திற்கு சென்று பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.