அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து துணை ஓ.பன்னீர்செல்வம் வாய் திறக்கவில்லை. அதிமுகவை பாஜகவின் இரண்டாம் நிலை கட்சியாக மாற்றுகின்றனர் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி;- பாஜக எத்தகைய அழிவு சக்தி என்பதை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெளிவுபடுத்தி உள்ளதை, அதிமுகவும் அதன் தொண்டர்களும் உணர வேண்டும்.  முதலமைச்சர் வேட்பாளரைக் கூட தெளிவாகத் தேர்வு செய்ய முடியாத நிலையில் அதிமுக அணி உள்ளது. 

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து துணை ஓ.பன்னீர்செல்வம் வாய் திறக்கவில்லை. அதிமுகவை பாஜகவின் இரண்டாம் நிலை கட்சியாக மாற்றுகின்றனர். 

மேலும், விடுதலைப் புலிகள் விவகாரத்தில் காங்கிரசுக்கு கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. திருவள்ளுவர், பெரியார் போன்றோருக்கு தமிழ்நாட்டில் காவி சாயம் பூசுவதைப் போன்ற இழிசெயல் இலங்கையிலும் நிகழ்ந்துள்ளதாகவும் கே.எஸ்.அழகிரி கூறினார்.