40 ஆண்டுகால அதிமுக பிளவுபடுவதை பாஜக விரும்பவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் கழகங்கள் இல்லாத நிலை ஏற்பட்டால், தமிழகம் மகா உன்னத நிலையை அடையும் என்றார். 

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளது. அவை வந்த பின்புதான் அவற்றின் நிலை குறித்து தெரியும். 

தமிழருவி மணியன் மாநாடு குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

ரஜினி அரசியலுக்கு வருவது அவரது முடிவு. வந்தால் தவறு இல்லை. ரஜினி மட்டுமல்ல அனைவரும் பாஜகவில் இணைய வேண்டும் என்று விரும்புகிறேன். பாஜக தலைவ அமித்ஷா, கட்சியை பலப்படுத்தவும், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

மேலும் பேசிய அவர், 40 ஆண்டுகால அதிமுக பிளவுபடுவதை பாஜக விரும்பவில்லை என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.