பாஜகவினர் தமிழ்நாட்டை சூறையாடப் பார்க்கிறார்கள். சாதிய, மதவாத அரசியலை கிராந்தோறும் கொண்டு சேர்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. எனவே, தமிழ்நாட்டை காப்பாற்றும் குழலில் நாம் இருக்கிறோம். சமூக நீதி அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும். திருமண உதவித் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டாம்.

பாஜக அரசியல் ஆதாயத்துக்காக சாதிய அளவில் பிளவுகளை ஏற்படுத்துகிறது. சாதி உணர்வுகளைத் திட்டமிட்டே பரப்புகிறார்கள். சாதியைப் பின்னுக்குத் தள்ளி பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருப்பது தமிழகம் மட்டுமே. அதனால்தான் அவர்களால் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியவில்லை என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ் ஸ்டுடியோ ஒருங்கிணைக்கும் சமூக நீதிக்கான கலைத்திருவிழா மற்றும் எழுச்சித் தமிழர் விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 17 அன்று நடைபெற உள்ளது. இதற்காக ஆர்வம் உள்ளவர்கள் குறும்படங்கள், ஆவணப் படங்கள், அனிமேஷன் படங்களைத் தயாரித்து ஜூலை 1-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்திய அரசியல் என்பது கலை துறையோடு பிணைந்த ஒன்றாகும். அண்ணா தொடங்கி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் எல்லாம் கலைத் துறையைச் சார்ந்தவர்கள்தான். 

சமூக நீதி பார்வை என்பது அனைவருக்குமானது. புதிய தலைமுறையினர் சமூக நீதி பார்வை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த முயற்சியே. இதை நாங்கள் வரவேற்கதக்கது. இந்திய அளவில் பாஜக அரசியல் ஆதாயத்துக்காக சாதிய அளவில் பிளவுகளை ஏற்படுத்துகிறது. சாதி உணர்வுகளைத் திட்டமிட்டே பரப்புகிறார்கள். சாதியைப் பின்னுக்குத் தள்ளி பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருப்பது தமிழகம் மட்டுமே. அதனால்தான் அவர்களால் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், அவர்கள் தற்போது தமிழ்நாட்டு பக்கம் திரும்பி உள்ளனர்.

பாஜகவினர் தமிழ்நாட்டை சூறையாடப் பார்க்கிறார்கள். சாதிய, மதவாத அரசியலை கிராந்தோறும் கொண்டு சேர்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. எனவே, தமிழ்நாட்டை காப்பாற்றும் குழலில் நாம் இருக்கிறோம். சமூக நீதி அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும். திருமண உதவித் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டாம். மூவலூர் மூதாட்டி பெயரில் வழங்கப்பட அந்தத் திட்டம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். மேலும் உயர்கல்வி நிதி உதவியை வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.