The birthday of a grandson - Invitation to S.Ve.Sekar
பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகருமான எஸ்.வி.சேகர், தனது பேரனின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் முக்கிய நபர்களுக்கு
பத்திரிக்கை கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஆளுநர் பன்வாரிலால் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பிரபல பத்திரிகையாளரான லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் தட்டிக் கொடுத்தது பெரிய அளவில்
பிரச்சனை ஆனுது.
இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்தரும் நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு
ஒன்றை வெளியிட்டிருந்தால். அவரது இந்த பதிவுக்கு பத்திரிகையாளர் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பத்திரிகையாளல்கள் காவல்
துறையிலும் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவரது
மனுவை தள்ளுபடி செய்தது. இதை அடுத்து, எஸ்.வி.சேகர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். உச்சநீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
மேலும் எஸ்.வி.சேகரை கைது செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
ஆனால், தமிழக போலீசார், எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் இருந்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, எஸ்.வி.சேகரை கைதுசெய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சபாநாயகர், இந்த வழக்கு விவகாரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனவே, அது பற்றி இங்கு பேச அனுமதி இல்லை என்று கூறி மறுத்து விட்டார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, தலைமை செயலாளரின் உறவினர் என்பதால எஸ்.வி.சேகரை கைது செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், எஸ்.வி.சேகரின் பேரனுக்கு நாளை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அவரது வீட்டில் பெரிய அளவில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எஸ்.வி.சேகர் நேற்றில் இருந்தே வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை அந்த பகுதி மக்கள் பார்த்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
பேரன் பிறந்த நாளை முன்னிட்டு, முக்கியமான நபர்களுக்கு எஸ்.வி.சேகர் பத்திரிக்கை கொடுக்க திட்டமிட்டுள்ளார். சில முக்கிய பாஜக பிரபலங்கள், சில ஆளும் கட்சி பிரபலங்கள், சினிமா நண்பர்கள், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் என பத்திரிகை கொடுத்து வருகிறார்.
எஸ்.வி.சேகர் நேற்றில் இருந்தே பத்திரிகை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. போலீஸ் பாதுகாப்புடன்தான் எஸ்.வி.சேகர் பத்திரிகை கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
