Asianet News TamilAsianet News Tamil

பலம் வாய்ந்த நாயை தேனீக்கள் துரத்த வேண்டும்... சசிகலாவை மறைமுகமாக தாக்கும் ஜெயலலிதா உதயவியாளர்..!

இந்தப்பதிவு சசிகலாவை நாயைப்போலவும், இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் உள்ளிட்ட நிர்வாகிகளை தேனிக்களை போல இருந்து கழகத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளதாக பலரும் கருதுகின்றனர். 
 

The bees should chase the strong dog ... Jayalalithaa's assistant who indirectly attacks Sasikala
Author
Tamil Nadu, First Published Feb 2, 2021, 11:44 AM IST

மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் பல ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவிற்கு வலது கரமாக இருந்தவர்.  தற்போது தனது முகநூலில் சில கட்சி சார்ந்த தகவல்களை பகிர்ந்து வருகிறார்.  அவரது பதிவுகள் அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை எற்படுத்தி வருகிறது. The bees should chase the strong dog ... Jayalalithaa's assistant who indirectly attacks Sasikala

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் ஆனபோது சசிகலா காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது பெரும் சர்ச்சையாகவும் வெடித்திருக்கிறது. சசிகலா மருத்துவமனையில் விடுதலை ஆனபோது, அதிமுக தலைவர் சசிகலா டிஸ்சார் ஆனார் என செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து சசிகலா காரில் அதிமுக கொடி கட்டப்படிருந்தது குறித்த கேள்வி எழுந்தது. அவர் அதிமுக அமைச்சர்களை அழைத்து பேசுவதாகவும், அதிமுகவை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. The bees should chase the strong dog ... Jayalalithaa's assistant who indirectly attacks Sasikala

இந்நிலையில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பகிர்வில், ‘’ஒரு கல்லை எடுத்து நாயைப் பார்த்து வீசினால் அது பயந்து ஓடி விடும். அதே கல்லால் ஒரு தேன் கூட்டை நோக்கி வீசினால் தேனீக்களுக்கு பயந்து நாம் ஓட வேண்டும். பலம் வாய்ந்த நாயைவிட வைப்பதற்கு காரணம் தேனீக்கள் ஒற்றுமையாக நம்மை துரத்துவதால்தான். எந்த இனமாக இருந்தாலும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்..!’’ எனப் பதிவிட்டுள்ளார்.

The bees should chase the strong dog ... Jayalalithaa's assistant who indirectly attacks Sasikala

இந்தப்பதிவு சசிகலாவை நாயைப்போலவும், இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் உள்ளிட்ட நிர்வாகிகளை தேனிக்களை போல இருந்து கழகத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளதாக பலரும் கருதுகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios