The asset value of 311 MLAs - 82 per cent
உத்தரப் பிரதேசத்தில், மீண்டும் போட்டியிடும் 311 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 82 சதவீதம் அதிகரித்து உள்ளது.

2012 தேர்தலில்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களில் 311 எம்.எல்.ஏ.க்கள் இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.
5 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் போட்டியிட்டபோது அவர்களுடைய சராசரி சொத்து மதிப்பு ரூ.3.49 கோடியாக இருந்தது. தற்போது அவர்களுடைய சொத்து மதிப்பு ரூ.6.33 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
82 சதவீதம்
அதன்படி அவர்களுடைய சொத்து மதிப்பு ரூ.2.84 கோடி அளவுக்கு அதிகரித்து உள்ளது. இது 82 சதவீத உயர்வு ஆகும். ஜனநாயக சீர்திருத்த சிந்தனையாளர் சங்கம் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டு இருக்கிறது.
இந்த எம்.எல்.ஏ.க்களில் அதிக அளவுக்கு சொத்து குவித்த எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஷா ஆலம் உர்ப் குட்டு ஜமாலி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.64 கோடிக்கு மேல் அதிகரித்து இருக்கிறது.
பகுஜன் சமாஜ்
2-வது இடம் பிடித்த அதே கட்சியின் நவாப் காசிம் அலிகானின் சொத்து மதிப்பு ரூ.40 கோடியும் அதிகரித்து உள்ளது. அவர்களை அடுத்து சமாஜ்வாதியின் அனுப் குமார்குப்தாவின் சொத்து மதிப்பு ரூ.35 கோடி அளவுக்கு உயர்ந்து இருக்கிறது.
கட்சிவாரியான புள்ளிவிவரத்தின்படி சமாஜ்வாதியின் 162 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ கோடியும், பகுஜன்சமாஜ் கட்சியின் 57 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு ரூ.4 கோடி அளவுக்கும் உயர்ந்து உள்ளது.
பா.ஜனதா
பா.ஜனதா கட்சியின் 55 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசின் 19 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ.2 கோடிக்கு அதிகமாக உயர்ந்து இருப்பதாகவும், தெரிய வந்துள்ளது.
