Asianet News TamilAsianet News Tamil

30வருசத்துக்கு முன்பே சொத்துல சமஉரிமை சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர்.! மு.க. ஸ்டாலின் பெருமிதம்.!

பெண்களுக்குச் சொத்தில் சம பங்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 

The artist who came up with the Property Equality Act 30 years ago.! MK Stalin is proud.!
Author
Tamilnadu, First Published Aug 12, 2020, 12:13 AM IST

பெண்களுக்குச் சொத்தில் சம பங்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஒரு பெண் மகளாக குடும்ப சொத்தில் சம பங்கு கோரலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2005ல் இந்து வாரிசு உரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

The artist who came up with the Property Equality Act 30 years ago.! MK Stalin is proud.!

இதுதொடர்பாக நீதிபதி அருண்குமார் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் கூறியதாவது, "ஒருமுறை மகள் என்றால், அவர் வாழ்நாள் முழுவதும் மகள் தான். ஒரு மகன் திருமணம் செய்து கொள்ளும் வரை மகன் தான். தந்தை உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பரம்பரை சொத்தில் சம பங்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பெண்களுக்குச் சொத்தில் சம பங்கு உண்டு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில்..." திராவிட இயக்கம் பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை மறுத்தது இல்லை. சம பங்கினை அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை இதய பூர்வமாக வரவேற்கிறேன்.பெண்களுக்குச் சொத்தில் சம பங்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி" என மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

The artist who came up with the Property Equality Act 30 years ago.! MK Stalin is proud.!

பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டத்தை, 30 ஆண்டுகளுக்கு முன்பே - 1989-ம் ஆண்டே கொண்டு வந்து, நாட்டில் அரிய முன்மாதிரியை கருணாநிதி உருவாக்கியவர் என்பதால், இத்தீர்ப்பை திமுகவின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதுகிறேன்.சமூகம் - பொருளாதாரம் - குடும்பம் என அனைத்துத் தளங்களிலும் சமஉரிமை பெற்றவர்களாகப் பெண்ணினம் தலை நிமிர்ந்து உயர இத்தீர்ப்பு சிறப்பான அடித்தளம் அமைக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios