Asianet News TamilAsianet News Tamil

கர்நாடக தேர்தலில் கூட்டணியா.? தனித்து போட்டியா.? அவசர செயற்குழு கூட்டத்திற்கு தேதி அறிவித்த எடப்பாடி பழனிசாமி

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்க அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16 ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

The AIADMK working committee meeting will be held on the 16th to discuss the Karnataka assembly elections
Author
First Published Apr 6, 2023, 11:06 AM IST

அதிமுக செயற்குழு கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 7 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் செயற்குழு கூட்டமாக மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஒரு சில காரணங்களால் செயற்குழு கூட்டம் ரத்து செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவசர செயற்குழு கூட்டம் 16.4.2023 - ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தல் குறித்தும், கழகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது சம்பந்தமாகவும், ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இபிஎஸ் தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம்... திடீர் ரத்து..! என்ன காரணம் தெரியுமா.?

The AIADMK working committee meeting will be held on the 16th to discuss the Karnataka assembly elections

தேர்தல் தொடர்பாக ஆலோசனை

எனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற 16.4.2023 - ஞாயிற்றுக் கிழமை பகல் 1.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

முதுமலைக்கு வரும் பிரதமர் மோடி..! பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்.. புலிகள் காப்பகம், விடுதிகள் மூடல்

Follow Us:
Download App:
  • android
  • ios