பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுக பலியாகி விடக் கூடாது என்றும் டிடிவி தினகரன் அணியினருடன், முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று எம்எல்ஏ கருணாஸ் கூறியுள்ளார்.

சென்னையில், எம்எல்ஏ கருணாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., இருவரும் சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். ஓ.பி.எஸ். அணியை அழைத்துக் கொண்ட எடப்பாடி அரசு, சசிகலா, தினகரனை நீக்குவது சரியான முடிவு அல்ல. 

பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுக பலியாகி விடக் கூடாது. விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதை உணர்ந்து தினகரன் அணியினருடன், முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

ஓ. பன்னீர்செல்வத்துக்கு அளித்த மரியாதையை தினகரனுக்கும் கொடுக்க வேண்டும். மத்திய அரசின் சூழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி அரசு இடம் அளித்துவிடக் கூடாது.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக அரசு தொடர்ந்து பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. தற்போது மிகவும் அசாதாரண சூழல் நிலவுவதாக கருதுகிறோம். 

இவ்வாறு கருணாஸ் கூறினார்.