அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தின் மூலம் எடப்பாடிக்கு பெரும்பான்மை இல்லை என ஆளுநருக்கு தெரிந்திருக்கும் எனவும் விரைவில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் எனவும் டிடிவி தரப்பு எம்.எல்.ஏ பழனியப்பன் தெரிவித்துள்ளார். 

சென்னை அதிமுக அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், 109  எம்எல்ஏக்கள் வரை கலந்துக்கொண்டதாக தெரிகிறது. 

மேலும் இந்த கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கும்  நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் யாரும்  கலந்துக்கொள்ளவில்லை. 

அதிமுகவின் 135  எம் எல் ஏக்களில், 21  எம் எல்ஏக்கள்  தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  எஞ்சிய 114   இல் கருணாஸ்  உள்ளிட்ட 3  எம்எல் ஏக்கள்  அதிமுக கூட்டணி  கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கது

கூட்டணி  கட்சியினர்  3 பேர் ,சபாநாயகர்  மற்றும் தமிழ்ச்செல்வன் தவிர்த்து  மற்ற  எம் எல் ஏக்கள்   கூட்டத்தில் பங்கேற்று  உள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தரப்பு எம்.எல்.ஏ பழனியப்பன் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தின் மூலம் எடப்பாடிக்கு பெரும்பான்மை இலை என ஆளுநருக்கு தெரிந்திருக்கும் எனவும் விரைவில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்தார். 

நாங்கள் கொடுத்த மனு மீது ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், எடப்பாடி கூட்டத்தில் இன்னும் 10க்கும் மேற்பட்டோர் எங்கள் எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.