பொன்னேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பலராமன் மகன் ராகேஷ் நிச்சயதார்த்த விழாவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

ரவுடிகள் தங்களது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது திறந்த வெளியில் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாடி வருவது கலாச்சாரமாகி வருகிறது. அந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் காவல் துறையினர் அவர்களை மடக்கிப்படித்து பாத்ரூம்களில் விழ வைத்து மாவு கட்டுப்போட்டு வருகின்றனர். இருப்பினிம் தங்களது வீரத்தை வெளிப்படுத்த பட்டாக்கத்திகளில் கேக் வெட்டி கொண்டாடுவது குறையவில்லை. 

இந்த நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்த பொன்னேரி எம்.எல்.ஏ பலராமன் மகன் ராகேஷின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. அதில் மணப்பெண், மணமகன் ஆகிய இருவரும் கேக் வெட்டும் நிகழ்ச்சியில் சொந்தபந்தங்களுக்கு மத்தியில் பட்டாக்கத்தியுடன் ஒருவர் கேக் வெட்ட முயன்ற புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 

ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ வீட்டு நிகழ்ச்சியிலேயே பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.