Asianet News TamilAsianet News Tamil

OPS vs EPS : 12 மணி வரை கெடு கொடுத்த இபிஎஸ்..! 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த ஓபிஎஸ்

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

The AIADMK general body has caused a stir as the co ordinator OPS did not approve the 23 resolutions to be passed in the assembly
Author
Chennai, First Published Jun 22, 2022, 1:58 PM IST

ஓபிஎஸ்யிடம் வழங்கப்பட்ட தீர்மானங்கள்

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும் தீர்மானங்கள் நீறைவேற்றப்பட உள்ளது. குறிப்பாக தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணிணி திட்டம், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு மாற்றி அறிவித்துள்ளது. இதே போல திமுக தேர்தல் வாக்குறுதியின் போது பெட்ரோல்,டீசல் விலை குறைப்பதாக கூறி விட்டு தற்போது வரை குறைக்கப்படாமல் உள்ளது. இது போன்ற திமுக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், மேகதாது அணை பிரச்சனையில் கர்நாடக அரசிற்கு கண்டனம் தெரிவித்தும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இது போன்ற 23 தீர்மானங்களை  அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம்  ஒப்புதலுக்காக வழங்கியுள்ளனர்.

The AIADMK general body has caused a stir as the co ordinator OPS did not approve the 23 resolutions to be passed in the assembly

ஒப்புதல் அளிக்க மறுத்த ஓபிஎஸ்

இந்தநிலையில், செயற்குழு - பொதுக்குழு தீர்மானங்களுக்கு இன்று மதியம் 12 மணிக்குள் ஒப்புதல் வழங்குமாறு இபிஎஸ் தரப்பு கேட்டுக்கொண்டிருந்தனர். இதன் பின்பு தான் தீர்மானங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் செய்ய வேண்டும் என கூறப்பட்டது.ஒருங்கிணைப்பாளர் பதவி கட்சியின் முதன்மை பதவி என்பதால் ஓ.பன்னீர்செல்வத்திடம் முதற்கட்ட ஒப்புதல் வாங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதிமுக தீர்மானக்குழு தயார் செய்த தீர்மானங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஓ.பன்னீர் செல்வத்தி்ன் ஒப்புதல் இல்லாமல் தீர்மானம் தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினாரோ அதே போல் தற்போதும் ஜெயலலிதா நினைவிடம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளதால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

OPS vs EPS : அதிமுக பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள்..! ஒப்புதலுக்காக ஓபிஎஸ்யிடம் ஒப்படைத்த அலுவலக நிர்வாகிகள்
 

Follow Us:
Download App:
  • android
  • ios