The AIADMK does not do this at first
மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
கடந்த 10 நாட்களாக பல்வேறு பிரச்சனை காரணமாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தமிழத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசும் கால தாமதம் செய்து வருகிறது.
இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அமைச்சர்களும் அதிமுக எம்.பிக்களும் மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் நாங்க ஆட முடியாது எனவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் எனவும் கூறி வருகின்றனர்.
அதிமுகவுக்கு என்று தனி கொள்கை உள்ளது எனவும் எடுத்தோம் கவுத்தோம் என எதுவும் கூற முடியாது எனவும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக செயல்தலைவர் ஸ்டாலின், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியான அதிமுக காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, நீட் தேர்வில் சட்டமன்ற தீர்மானத்தை மதிக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். .
