தெளிவு இருப்பவர்களுக்கு துணிவு இருக்கும், துணிவு இருப்பவர்கள் சாதிப்பார்கள், அப்படிதான் தளபதி இருக்கிறார் இந்தியாவிலேயே முதல் முதலாக, நகர்புற அமைப்புகளில் பெண்களுக்கு 60 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்திருப்பது தளபதி ஸ்டாலின் மட்டுமே! சனாதன சக்திகளின் அச்சுறுத்தல்கள் இருந்து 

தமிழக முதல்வர் ஸ்டாலின் 69 ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில், அமைச்சர் மா சுப்ரமணியன் ஏற்பாட்டின் கீழ் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தலைமையில் அரசியல் தலைவர்களின் வாழ்த்தரங்கம் சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக தலைமை செயலாளர் துரை வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் மற்றும் கட்சி தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து மேடையில் பேசிய கட்சியின் தலைவர்கள், விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது, தமிழகமே தளபதி அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று சொல்வார்கள் புலிக்கு புலிக்குட்டி தான் பிறக்கும் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் நம்முடைய தலைவர் கலைஞரைப் போல அல்லும் பகலும் உழைத்துக் கொண்டே இருக்கிறார். 

பெரியாருக்கு பிறகு அண்ணா அவரது கொள்கையை நாட்டு மக்களுக்கு கொண்டு சேர்த்தார். பெரியார், அண்ணாவிற்கு பிறகு அவரது கொள்கைகளை பின்பற்றி கழகத்தை அறை நூற்றாண்டு காலமாக வழி நடத்தியவர் தலைவர் கலைஞர். அவர்மீது என்னவெல்லாம் பழி புகுத்த முடியுமோ, அதையெல்லாம் செய்தாலும் எவராலும் அவரை அசைக்க முடியவில்லை. எம் ஜி ஆர் பிரிவிற்கு பிறகு 13 ஆண்டுகள் கடந்து கழகத்தை மீண்டும் உருவாக்கி பீனிக்ஸ் பறவை போல எழுந்தவர் கலைஞர். கலைஞருக்கு பிறகு திமுக தடுமாற்றம் காணும், சிதறிப்போகும், சின்னாபின்னமாகும், இவருடைய தலைமையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றெல்லாம் சொன்னவர்கள் மத்தியில் செவிலில் அறைவது போல தற்போது கோட்டையில் வந்து அமர்ந்து இருக்கிறார் மு.க ஸ்டாலின். 

தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தை அகில இந்தியா தலைவர்கள் மூலம். வெளியிட்டு, தமிழகத்தில் உள்ள இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாய் முதல்வர் இருக்கிறார். கூட்டணியில் ஒரு சிராய்ப்பு கூட இல்லாமல் பார்த்துக்கொள்ளும் பாங்கு தளபதியிடம் உள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் கூட்டணி சிதறி போய் விட்டது, பாமக விலகியது, பாஜக விலகியது. ஆனால் திமுக கூட்டணியானது 2014 இல் இருந்து வலுவாக தொடர்ந்து வருகிறது. மீனுக்கு பிறந்த மீன் குஞ்சிடம் போய் நீ என்ன ஆக வேண்டும் என்று கேள்வி கேட்பது போல, முதல்வரிடம் நீங்கள் அரசியலுக்கு வராமல் போகி இருந்திருந்தால் என்னவாக இருந்திருப்பீர்கள் என்ற ஊடகதினரின் கேள்வி.

தெளிவு இருப்பவர்களுக்கு துணிவு இருக்கும், துணிவு இருப்பவர்கள் சாதிப்பார்கள், அப்படிதான் தளபதி இருக்கிறார் இந்தியாவிலேயே முதல் முதலாக, நகர்புற அமைப்புகளில் பெண்களுக்கு 60 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்திருப்பது தளபதி ஸ்டாலின் மட்டுமே! சனாதன சக்திகளின் அச்சுறுத்தல்கள் இருந்து சிறுபான்மை சக்திகளை காப்பாற்ற வேண்டும் என்பதே அவரது கொள்கை நாம் பள்ளி பிள்ளைகளுக்கு லேப்டாப் தருகிறோம் அவர்கள் பள்ளி பிள்ளைகளுக்கு காவி தருகிறார்கள் சனாதன கட்சிகள். அவர்களால் இந்தியாவிலேயே தொட முடியாத இடம் தமிழகம் மட்டும் தான், திராவிட முன்னேற்ற கழகம் தான் தமிழகத்தில் சனாதன கட்சிகள் நுழையாத வண்ணம் பாதுகாக்கிறது. அகில இந்திய அளவில் வருகின்ற 2024 தேர்தலில் முற்றிலுமாக சனாதன காட்சிகளை விரட்டி அடிக்கும் காலத்தில் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம், என பேசினார்.