நடந்து முடிந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை முதல் நடைபெற்று வருகிறது. ஒருசில  மாவட்டங்களில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியான ரிசல்டின் படி திமுக 248 மாவட்ட கவுன்சிலர்களையும், 2053 கவுன்சிலர்களையும் பெற்று முதலிடத்தில் உள்ளது.  

அதிமுக 211 மாவட்ட கவுன்சிலர்களையும், 1751 ஒன்றியக்கவுன்சிலர் பதவிகளையும் கைப்பற்றி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.  இந்தக் கட்சிக்கு அடுத்தபடியாக 14 மாவட்ட கவுன்சிலர்களையும், 143 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் பாமக கைப்பற்றி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.  

இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 11 மாவட்டக்கவுன்சிலர்களையும், 121 ஒன்றியக் கவுன்சிலர்களையும் பிடித்து நான்காம் இடம்பிடித்துள்ளது. ஆக மொத்தத்தில் தேசிய கட்சிகளை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ள பாமக, முறையே திமுக, அதிமுக கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.