Asianet News TamilAsianet News Tamil

100 ஆண்டுகால கனவு நிறைவேறுகிறது. ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம், இபிஎஸ் அதிரடி.

ரூ.14,400 கோடியில் 262 கி.மீ தூரத்திற்கு நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகும் 6,300 கனஅடி தண்ணீர் ஆக்கப்பூர்வமாக திருப்பப்படுவதால் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரிப்பதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தியாகும். 

The 100-year-old dream is coming true. Rs 6,941 crore Cauvery-Gundaru Link Project, EPS Action.
Author
Chennai, First Published Feb 20, 2021, 10:28 AM IST

காவிரி-குண்டாறு திட்டத்துக்கு வரும் 21-ஆம் தேதி (நாளை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். இதுகுறித்து பொதுப்பணித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவேரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். 

முதல்வர் எடப்பாடி மு.பழனிச்சாமி வரும் 21.02.2021 அன்று புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெறும் விழாவில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவேரி – தெற்கு வெள்ளாறு - வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவேரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்கள். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விழாவிற்கு தலைமைத் தாங்குகிறார்.  

The 100-year-old dream is coming true. Rs 6,941 crore Cauvery-Gundaru Link Project, EPS Action.

இவ்விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கதர் மற்றும் கிராமத்தொழில்கள் வாரிய துறை அமைச்சர் க.பாஸ்கரன், பிற்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்து கொள்கின்றனர்.

வெள்ளக் காலங்களில் காவேரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் நூறாண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது. ரூ.6,941 கோடி மதிப்பிலான முதல் கட்டத்திற்கு தற்பொழுது அடிக்கல் நாட்டப்படுகிறது. 

The 100-year-old dream is coming true. Rs 6,941 crore Cauvery-Gundaru Link Project, EPS Action.

இதன்மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42,170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ நீளத்திற்கு கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது. 
இரண்டாவது கட்டமாக, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 220 ஏரிகளும், 23,245 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாற்றிலிருந்து 109 கி.மீ நீளத்திற்கு கால்வாய் உருவாக்கி வைகையுடன் இணைக்கப்படுகிறது. மூன்றாவது கட்டத்தில், விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள் மற்றும் 44,547 ஏக்கர் நிலங்களும் பயன் பெறும் வகையில் 34 கி.மீ நீளத்திற்கு கால்வாய் வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது. 

The 100-year-old dream is coming true. Rs 6,941 crore Cauvery-Gundaru Link Project, EPS Action.

ரூ.14,400 கோடியில் 262 கி.மீ தூரத்திற்கு நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகும் 6,300 கனஅடி தண்ணீர் ஆக்கப்பூர்வமாக திருப்பப்படுவதால் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரிப்பதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தியாகும். காவிரி உப வடிநிலத்திலுள்ள உள்கட்டமைப்புகளில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் ரூ.3,384 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 987 கி.மீ நீளமுள்ள 21 ஆறுகளின் மொத்த பாசன பரப்பான 4,67,345 ஏக்கர் நிலங்கள் பாசனம் உறுதி செய்யப்படும். மேலும், காவிரி டெல்டாவிலுள்ள பழமை மிக்க பாசன கட்டுமானங்கள் ஸ்காடா தொழில்நுட்பம் மூலம் ரூ.72 கோடி மதிப்பில் தானியங்கி அமைப்புகள் நிறுவப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் காவேரி உப வடிநில கால்வாய்களின் பாசனத்திறன் 20 சதவீதம் அதிகரிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios