திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில்  மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது என்ற அறிக்கையை காவேரி மருத்துவமனை சற்றுமுன் வெளியிட்டது.  

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது என்ற அறிக்கையை காவேரி மருத்துவமனை சற்றுமுன் வெளியிட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த 27 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் திடீர் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். 
தொடர் சிகிச்சையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் உடல் நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்கு விரைந்தனர்.

இந்த தருணம் மேலும், ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மருத்துவமனை எதிரே கூடி உள்ள, தொண்டர்கள் எழுந்து வா தலைவா ..மீண்டும் வென்று வா தலைவா....காவேரியை வென்று வா தலைவா என்றும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். 

தற்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காவேரி மருத்துவமனை விரைந்தார். மேலும் சட்ட மன்ற உறுப்பினரும், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.இதற்கு முன்னதாக, இவ்வளவு அவசரம் காண்பிக்காத உறவுகள் தற்போது காவேரி மருத்துவமனைக்கு அவசர அவசரமாக விரைந்து வருகின்றனர் 

காவேரி மருத்துவமனை எதிரே தொண்டர்கள் அதிக அளவில் குவிய தொடங்கி உள்ளதால், போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.