Asianet News TamilAsianet News Tamil

அதிமுக ஆட்சியில் அந்த ரூ.100 கோடி... கடைசி கைவிட்ட மு.க.ஸ்டாலின்... ப்ளாக்லிஸ்டுக்கு போகுமா கிருஷ்டி..?

நாமக்கல் கிருஷ்டி நிறுவனம் தொடர்புடைய வழக்கில் வருமானவரி சோதனையில் சிக்கிய நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் சுதாதேவி, 3 ஆண்டுகளுக்கு பிறகு அப்பதவியிலிருந்து கடந்த 14ம் தேதி நீக்கப்பட்டார்.  
 

That Rs 100 crore in the AIADMK regime ... MK Stalin who gave up last ... Will Krishti go to the blacklist ..?
Author
Tamil Nadu, First Published May 20, 2021, 5:34 PM IST

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 20 ஆயிரம் டன் துவரம்பருப்பு கொள்முதல் செய்ய முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் டெண்டர் கோரப்பட்டது. இதையடுத்து நாமக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது.

இந்த டெண்டரில் வெளிச்சந்தையில் ஒரு கிலோ துவரம்பருப்பு ரூ.100க்கும் குறைவாக விற்கப்படும் நிலையில், ரூ.143க்கு கிறிஸ்டி நிறுவனம் டெண்டர் எடுத்திருந்தது. கூடுதல் விலைக்கு டெண்டர் கொடுக்கப்பட்டதால் அரசுக்கு ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என அறப்போர் இயக்கம் புகார் எழுப்பி இருந்தது.That Rs 100 crore in the AIADMK regime ... MK Stalin who gave up last ... Will Krishti go to the blacklist ..?

இது தொடர்பான நடத்தப்பட்ட விசாரணையில், அதிகாரிகள் மற்றும் கிறிஸ்டி நிறுவனம் கூட்டாக முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்து வந்த சுதாதேவி ஐ.ஏ.எஸ் கடந்த வாரம் மாற்றப்பட்டார். பின்னர் முறைகேடு புகார் உறுதியானதையடுத்து கிறிஸ்டி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு. மேலும் புதிய டெண்டர் கோரியதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.That Rs 100 crore in the AIADMK regime ... MK Stalin who gave up last ... Will Krishti go to the blacklist ..?

அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கிறிஸ்டி நிறுவனத்தன் மீது ஏற்கனவே பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன. குறிப்பாக சத்துணவு திட்ட முட்டை கொள்முதல் முறைகேடு தொடர்பாக ஆளுநரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கிருஷ்டி நிறுவனம் தொடர்புடைய வழக்கில் வருமானவரி சோதனையில் சிக்கிய நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் சுதாதேவி, 3 ஆண்டுகளுக்கு பிறகு அப்பதவியிலிருந்து கடந்த 14ம் தேதி நீக்கப்பட்டார்.  That Rs 100 crore in the AIADMK regime ... MK Stalin who gave up last ... Will Krishti go to the blacklist ..?

இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் கூறுகையில், “அ.தி.மு.க ஆட்சியில் கிறிஸ்டி நிறுவனத்தின் முறைகேடு கூறித்து புகார் தெரிவித்திருந்தோம். மேலும் துவரம் பருப்பு டெண்டர் விடக்கூடாது என்றும் தெரிவித்தோம். ஆனால் இறுதியில் டெண்டர் விடப்பட்டது. தற்போது இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்க ஒன்று" எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios