அரசியல் அட்ரஸ் இல்லாமல் இருந்த டி.டி.வி.தினகரனுக்கு அதை ஏற்படுத்திக் கொடுத்ததே நான் தான் என அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியது தவறு என அமமுகவை சேர்ந்த வெற்றிவேல் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அமமுக செய்தி தொடர்பாளர் வெற்றிவேல் கூறுகையில், ‘’டி.டி.வி.தினகரனை நான்தான் அரசியலுக்கு இழுத்து வந்தேன் என்று புகழேந்தி சொல்வது தப்பு. அமமுக ஐடி விங்க் அந்த வீடியோவை எடுக்கவில்லை.

ஜெயலலிதாவின் சாவின்போது கூட டி.டி.வி.தினகரன் இல்லை என அவர் கூறுகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் அண்ணன் 4 முறையில் வந்து பார்த்தார். சசிகலா மருத்துவமனையில் இருந்தே அம்மாவை கவனித்துக் கொண்டார். கர்நாடகாவில் இருந்து இங்கு வந்து டி.டி.வி.தினகரனுக்கு அடையாளம் கொடுத்தார் புகழேந்தி என்பதெல்லாம் எந்த விதத்தில் நியாயம். 

மனதில் பிரச்னை இருந்தால் நேரில் வந்து பேசணும். அவர் பேசுவதை பார்த்தால் அவர் வேறு கட்சிக்கு போவதை போல் தான் தெரிகிறது. போவதும். போகாததும் அவரது விருப்பம். ஆனால், அமமுக ஐடி விங்க் வீடியோ எடுத்து அதனை வெளியிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அம்மா உயிரோடு இருந்தார் என்கிற வீடியோவை மட்டுமே நாங்கள் வெளியிட்டோம் மற்ற படி எந்த வீடியோவையும் அமமுக வெளியிடவில்லை’’ என அவர் தெரிவித்தார்.