திமுக தலைவர் கருணாநிதி நல்ல நினைவாற்றலுடன் இருப்பதாகவும், தனது கண்களாலேயே பேசினார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.கருணாநிதி உடல் குன்றியதால் கடந்த டிசம்பர் மாதம் மருத்துவ மனைனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.  தொடர்ந்து அவர், முதுமை காரணமாக கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வு வெடுத்து வருகிறார்.

இதையடுத்து கருணாநிதியை அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது இல்லத்துக்கு சென்று நலம் விசாரித்து வருகின்றனர். ராகுல் காந்தி, நிதீஷ்குமார், திருநாவுக்கரசர், ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் அவரை சந்தித்தனர்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கருணாநிதியை அவரது இல்லத்தில்  சந்தித்தார் .

அவருடன்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர், முத்தரசனும் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

இதைத் தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன்,  திமுக தலைவர் கருணாநிதி கண்களால் எங்களிடம் பேசியதாக கூறினர்.

நல்ல நினைவாற்றலுடள் உள்ள அவர், விரைவில் குணமடைந்து அரசியலில் முழுமையாக ஈடுபடுவார் என்றும் பாண்டியன்  தெரிவித்தார்.