Thanks to my beloved RK Nagar people! Dinakaran

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்த அன்புக்குரிய தொகுதி மக்களுக்கும், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் டிடிவி தினகரன் நன்றி கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் மூழ்கி உள்ளனர். தினகரனின் இந்த வெற்றியை அவர்கள் நேற்று முதல் கொண்டாடி வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது தினகரன் வெற்றி முகம் நோக்கி செல்வதை அடுத்து, அவருக்கு அதிமுகவை சேர்ந்த சிலர் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், வேலூர் எம்.பி. செங்குட்டுவன், தினகரன் வீட்டுக்கே சென்று வாழ்த்து தெரிவித்தார். மேலும், எம்.எல்.,ஏ.க்கள், எம்.பி.க்கள் என பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ஆர்.கே.நகர் வெற்றியைத் தொடர்ந்து டிடிவி தினகரன், தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எனக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றிப் பெற வைத்த எனது அன்புக்குரிய ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கும், எனது வெற்றிக்காக இரவு பகல் பாராது அயராது பாடுபட்ட பாசமிகு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும், தோழமைகளுக்கும்
மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தினகரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.