தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்க்ப்பட்ட நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். அது குறித்த ஆதாரத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஹெச்.ராஜா.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் புதிய புதிய கட்சிகள் தொடங்கி
வருகிறார்கள். கமல்ஹாசன், ரஜினிகாந்த், தினகரன் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் புதிய மாற்றத்தை உருவாக்குவதாக சொல்கிறார்கள். ஆனால் இவர்களால் மாற்றத்தை
உருவாக்க முடியாது.

மேலும் பேசிய அவர், கமல்ஹாசன் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடந்து வருவதாக சொல்கிறார்கள். யார், யாருக்கு மின்னஞ்சல் முகவரி இருக்கிறதோ, அவர்களை உறுப்பினர்களாக சேர்த்ததாக மெயில் அனுப்புகிறார்கள். கமல்ஹாசன் கட்சியில் சேர்ந்ததாக எனக்கும் மெயில் அனுப்பி இருக்கிறார்கள் (அப்போது தனது டேப்லேட்டில் மின்னஞ்சலுக்கு வந்திருந்த மெயிலை காட்டினார்).

மக்கள் நீதி மய்யம் கட்சியில் தமிழிசை சௌந்தரராஜன், மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்ததாக அவருக்கு மெயில் அனுப்பப்பட்ட நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர்
ஹெச்.ராஜாவும் கட்சியில் சேர்ந்ததற்கு நன்றி தெரிவித்து மெயில் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து ஹெச்.ராஜா, மக்கள் நீதி மய்ய உறுப்பினர் சேர்க்கையில் குளறுபடிகள் நடைபெறுவதாகவும், கட்சியில் தன்னை உறுப்பினராக சேர்த்துள்ளதாக கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினர் சேர்க்கும் விதும் இதுதான் போல என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதனுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினர்
ஆனதற்கான மின்னஞ்சலையும் அதில் பதிவிட்டுள்ளார்.