கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். 

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பையொட்டி சென்னை புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேலும், சந்திப்பு நடைபெறவுள்ள மாமல்லபுரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கறிக்கப்பட்டு விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. 

இந்நிலையில், பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், ரோஜா பூ கொடுத்தும் பிரதமர் மோடியயை வரவேற்றனர். 

 

பின்னர், பிரதமர் மோடி கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என தமிழில் ட்வீட் செய்துள்ளார். மேலும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் என பதிவிட்டுள்ளார்.