Asianet News TamilAsianet News Tamil

"ஹாஸ்டலை" காலி செய்தார் தங்க தமிழ்செல்வன்...! வாடிய முகத்தோடு வெளியேறிய பரிதாபம்..!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் இருந்து தனது அறையை இன்று காலி செய்தார் தினகரன் ஆதரவாளரான தங்கத்தமிழ் செல்வன் 

thangathamil selvan vaccated from mla hostel
Author
Chennai, First Published Nov 1, 2018, 4:55 PM IST

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் இருந்து தனது அறையை இன்று காலி செய்தார் தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ் செல்வன் 

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அவர்களின் எம்எல்ஏ விடுதி சீல் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் தகுதிநீக்கம் குறித்து, வழக்கு நிலுவையில் இருந்து வந்ததால் உயர்நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருந்தனர் எம்.எல்.ஏ.க்கள்.

thangathamil selvan vaccated from mla hostel

18 எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் தனபால் எடுத்த தகுதி நீக்க நடவடிக்கையை அடுத்து, 18 எம்.எல்.ஏக்களின் அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்களின் பொருட்கள் அனைத்தும் அறையிலேயே விட்டு வைத்து இருந்தனர். 

thangathamil selvan vaccated from mla hostel
 
இந்நிலையில் ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதையடுத்து, 3 ஆவது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. அண்மையில் தீர்ப்பளித்த 3-வது நீதிபதியான சத்யநாராயணன் தகுதிநீக்கம் செல்லும் என தீர்ப்பளித்ததால் 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அவர்கள் அனைவரும், இடை தேர்தலில் போட்டியிட தடையும் இல்லை என கூறி தீர்ப்பு அளித்தார்.

இதனை தொடர்ந்து, சட்ட பேரவை செயலாளர், எம்.எல்.ஏ அறையை காலி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, 18 எம்.எல்.ஏக்களில் முதலில் முந்திக்கொண்டு எம்.எல்.ஏ விடுதியில் இருந்து தனது அறையை காலி செய்தார் தங்க தமிழ் செல்வன். 

thangathamil selvan vaccated from mla hostel

சிரித்த முகத்தோடு போஸ் கொடுத்தாலும், கஷ்டப்பட்டு தெருதெருவாய் சென்று ஓட்டு கேட்டு வெற்றி பெற்ற பதவியை ஏதோ காரணத்திற்காக, பறிகொடுத்து விட்டு தங்கத்தமிழ் செல்வன் வெளியே சென்றதை காண முடிந்தது.

தமிழில், ஒரு வார்த்தை உண்டு....உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும் என்பது போல் இருந்தது தங்க தமிழ் செல்வன், எம்எல்ஏ ஹாஸ்டலை விட்டு வெளியேறிய இந்த நாள்...!

Follow Us:
Download App:
  • android
  • ios