Thangamani says They talk badly on my phone
சாராய அதிபர் ஆளுங்க என்னை தொலைபேசியில் கடுமையாக திட்டி, கேவலமாக பேசுகின்றனர், அதனாலேயே என்னால் தொலைபேசியை எடுக்க முடியவில்லை என சபாநாயகரிடம் சோகமாக புகார் அளித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பதிலுரையாற்றிய அமைச்சர் தங்கமணி, "என்னை டாஸ்மாக் அமைச்சர் என்று கொச்சைப்படுத்துகின்றனர். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. சட்டசபையில் நேற்று முன்தினம் அவரை நான் ஒருமையில் பேசியதாக தொலைபேசியில் என்னைக் கடுமையாக திட்டி, கேவலமாக பேசுகின்றனர், அதனாலேயே என்னால் தொலைபேசியை எடுக்க முடியவில்லை என சபாநாயகரிடம் சோகமாக புகார் அளித்தார்.
அதுமட்டுமல்ல, சாராய அதிபர் என்று தினகரனை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்த அவர், ஆர்.கே.நகரில் ஹவாலா பணம் மூலம் வெற்றி பெற்றதாகவும் கடுமாக போட்டுத் தாக்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன்; "ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் காவல் துறையின் உதவியுடன் வீட்டுக்கு 6 ஆயிரம் என்று 180 கோடி ரூபாய் வரை கொடுத்தது ஊருக்கே தெரியும். ஆனாலும் அவர்கள் முயற்சி மக்களிடத்தில் எடுபடவில்லை. அதனால் அவர் கோயபல்ஸ் மாதிரி நாங்கள் பணம் கொடுத்ததாகக் கூறிவருகிறார்.
தேர்தலின்போது மக்களுக்கு நாங்கள் பணம் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை. ஒருவேளை அப்படி வாக்குறுதி அளித்திருந்தால் அதனை நிச்சயம் நிறைவேற்றுவோம்" என்று குறிப்பிட்டுச் செய்தியாளர்களை கலகலப்பாக்கினார்.
மேலும் பேசிய அவர், நான் தனிநபர் என சொல்லும் அமைச்சர் ஏன் என்னைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டும். காவல் துறையை அவர்கள்தானே வைத்திருக்கிறார்கள். மிரட்டியவர்கள் யார் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கலாமே" என கூலாக செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கமணியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.
