Thangamani has alleged headline has been increased to Dinakaran after winning a seat
ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவுடன் தினகரனுக்கு தலைக்கணம் அதிகரித்துவிட்டதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சிதான் வெல்லும் எனச் சொல்லப்பட்டுவந்த நிலையிலிருந்து மாறி 13 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சித் தோல்வியை பரிசாக கொடுத்தார் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட தினகரன். தனி ஒரு சுயேட்சையாக ஆளும் கட்சியையும் பலம் வாய்ந்த எதிர்கட்சியையும் தொர்கடுத்து பெரும் சாதனை படைத்துள்ளார்.

இதனையடுத்து, முதல்முதாலாக சட்டசபைக்கு வந்த தினகரனுக்கும் பன்னீர்செல்வம் மற்றும் தங்கமணிக்கும் விவாதம் வெடித்தது. அதுமட்டுமல்ல ஆளும் அரசுக்கும் தினகரனுக்கும் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக விமர்சனம் என்ற பெயரில் தாறுமாறாக கலாய்த்து தள்ளுகிறார்கள்.
ஹவாலா தினகரன், கொள்ளை கும்பல், அம்மாவை கொன்றுவிட்டார்கள் என தினகரனின் குடும்பத்தை நாரடிக்கின்றனர் அமைச்சர்கள். ஆமைதலையர் ஜெயகுமார், இடிச்சப்புளி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என கலாய்ப்பின் உச்சத்துக்கே சென்றார் தினகரன்.

இந்நிலையில் நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவுனேயே தினகரனுக்கு 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக நினைப்பு வந்துவிட்டதாக கூறினார்.
அந்த தலைக்கணம் மற்றும் திமிரில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை 420 என்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை அமாவாசை என்றும் வசை பாடி வருகிறார் என்றும், தினகரனால் மக்களுக்கு நல்லது செய்யமுடியாது என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
