thanga thamizhselvan criticized ministers
தினகரன் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்க தலைமை செயலகம் செல்கிறார் என்பதால் அமைச்சர்கள் அனைவரும் தலைமை செயலகத்தை காலி செய்துவிட்டு தெறித்து ஓடிவிட்டனர் என தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் கிண்டலடித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுகவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற தினகரன், எம்.எல்.ஏவாக தலைமை செயலகத்தில் பதவியேற்றார். சுயேட்சையாக சட்டசபைக்குள் செல்லும் தினகரன், ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.கே.நகரில் தினகரனின் வெற்றி பெற்றதை அடுத்து பழனிசாமி அணியில் இருக்கும் சில எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து தினகரனின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளை பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏவாக பதவியேற்க தினகரன் தலைமை செயலகம் செல்கிறார் என்றதும் அமைச்சர்கள் அனைவரும் தலைமை செயலகத்தை காலி செய்துவிட்டு ஓடிவிட்டனர். தினகரன் வருகிறார் என்றதும் கோட்டையை காலி செய்து எங்களிடம் விட்டுவிட்டு ஓடிவிட்டனர் என அமைச்சர்களை தங்க தமிழ்ச்செல்வன் கிண்டலடித்தார்.
