தங்க தமிழ்செல்வன் விரைவில் அமமுக அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தங்க தமிழ்செல்வன் ஆடியோ விவகாரம் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி வந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ’’ வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வருகிறார் தங்க தமிழ்செல்வன். நானும் ரொம்ப நாளாக எச்சரித்து வருகிறேன். இனி விளக்கம் அவர் நடந்து கொண்டது பற்றி கேட்க விளக்கம் கேட்க முடியாது. விரைவில் கொள்கைப்பரப்பு செயலாளர் அறிவிக்கப்படுவார். இதுவரை அவரை நீக்கம் செய்யவில்லை.

ஆனால் அவரது பொறுப்புக்கு மற்றொருவர் அறிவிக்கப்படுவார். தங்க தமிழ்செல்வனை யாரோ பின்னாலிருந்து இயக்குகிறார்கள். என்னிடம் நேராக பேசமாட்டார். வெளியில் தான் இப்படி பேசுவார். எனக்கு அறிவுரை கூற அவர் யார்? ஊடகங்கள் அவரை பெரிதாக்கி ஒரே நாளில் அவரது கதையை முடித்து விட்டன.

அவரை கட்சியை விட்டு எப்படி நீக்க முடியும் என்னுடன் 20 ஆண்டுகளாக பழகியவர். அவரை பதவியிலிருந்து மட்டுமே விலக்கி வைக்க நினைத்திருந்தோம். ஆனால், இனி அவர் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவார்’’ என அவர் தெரிவித்தார்.