இந்த நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு கழக கொள்கை பரப்புச்செயலாளரும், தென்மண்டல பொறுப்பாளருமான தங்கதமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் தீவிரமாக களப்பணியாற்றி கழக வேட்பாளரை வெற்றிபெற செய்வது குறித்து ஆலோசனை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன்; வரக்கூடிய நாடாளு மன்றத் தேர்தலுக்கு மே மாதம் வரை நேரம் இருக்கு. வேட்புமனு கடைசி தேதி என்றைக்கோ அன்றுவரை கூட்டணி பேசலாம். கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் எதுவுமே இறுதி செய்யப்படவில்லை.

எல்லா கட்சிகளும் எல்லாத் தரப்பிலும் பேசுகிறார்கள். அந்தந்த கட்சிக்கு யார் கூட கூட்டணி சேர்ந்தால் வெற்றி பெற முடியும் அப்படி ஒரு நிலை இருக்கிறது. இப்ப பேசிக்கிட்டு இருக்கிற கூட்டணி நிரந்தரமான கூட்டணி இல்லை.  கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. லெட்டர் பேடு கட்சிக்கு கண்டு பயந்து ஏன் சுப்ரீம் கோர்ட்டுக்கு குக்கர் சின்னம் கொடுக்கக்கூடாது என்று ஓடுகிறீர்கள். 

உண்மையிலேயே உங்களுக்கு தைரியம் தெம்பு இருந்தால் குக்கர் சின்னத்தை கொடுத்து தேர்தலை சந்தித்து பாரு அதிமுக டெபாசிட் வாங்குதா என்று பார்ப்போம். இல்ல அமைச்சர் ஜெயக்குமார் டெபாசிட் வாங்குகிறாரா என்று பார்ப்போம். கூட்டணி வந்தால் நல்லது வரவில்லை என்றால் அமமுக தனித்து நின்று மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறினார்.