எடப்பாடி பழனிசாமியை மாற்றியே ஆக வேண்டும் !! தங்க தமிழ்செல்வன் பிடிவாதம் !!!

அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கமல்ல என்றும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோரை மாற்றுவதே எங்கள் நோக்கம் எனவும்  தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.

டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுநரை நேரில் சந்தித்து தனித்தனியாக கடிதம் அளித்தனர்.

இதைர் தொடர்ந்து அவர்கள் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

 இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் சின்ன வீராம்பட்டினம், விண்ட் பிளவர்  சொகுசு விடுதியில் டி.டி.வி.ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோரை மாற்றுவதே எங்கள் நோக்கம் எனவும்  ஆட்சியை கலைப்பது அல்ல என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சரை  மாற்றுவது தொடர்பாக இன்று அல்லது நாளைக்குள் முடிவு எடுக்கப்படும். அந்த முடிவு அனைவருக்கும் நல்ல முடிவாகவே இருக்கும் என்றும் கூறினார்.