தந்தை பெரியார் குறித்து பொய்யான தகவல்களை பரப்பிய  ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் உயிரோடு நடமாட முடியாது என  திராவிடர் விடுதலை கழகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் ,  சில தினங்களுக்கு முன்பு நடந்த துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் ராமர் ,  சீதை ஆகியோரின் நிர்வாண புகைப்படங்கள் எடுத்துச் சென்றதாகவும் ,  அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும்  பேசினார் ,  

ரஜினி பெரியார் பற்றி பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதுடன் பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசி வருகிறார் எனவே  உடனே அவர் தன் பேச்சுக்கு ஒரு மன்னிப்பு கேட்க வேண்டுமென பெரியார் இயக்கங்கள் ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்தனர் .அதுமட்டுமில்லாமல் திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒருசேர நடிகர் ரஜினிகாந்தின் பேச்சை  கண்டித்துள்ளன ,  சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து தாம் தெரிவித்த கருத்தில்  எந்த தவறும் இல்லை அதனால் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என கூறினார் .  

இது மேலும்  பெரியார் இயக்கங்களின் மதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது ரஜினி தார்மீகமான முறையில்  மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் எனவும்  தி.க , தந்தை பெரியார் திராவிட கழகம் ,  திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன .  இந்நிலையில் நேற்று போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தை முற்றுகையிட்ட  திராவிடர் விடுதலை கழகத்தினர்,

நடிகர்  ரஜினிக்கு எதிராக முழக்கம் எழுப்பினர் ,  பொய்யான தகவல்களை கூறி பெரியாருக்கு எதிராக களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் எனவும் தன் அரசியல் நோக்கத்திற்காக ,  பெரியாரை விமர்சிக்கிறார் எனவும்  அப்போது ரஜினியை கண்டித்தனர் .  அப்போது செய்தியாளர்கள் சந்தித்த அவ்வியக்கத்தினர் ரஜினியின் திரைப்படங்கள் எங்கு ஓடினாலும் அதை தடுப்போம் என்றும் எச்சரித்தனர் அப்போது கூட்டத்தில் பேசிய ஒரு நபர் பெரியாரை தவறாகப் பேசி விட்டு ரஜினி தமிழ்நாட்டில் நடமாடவே முடியாது அவரை உயிரோடு விடமாட்டோம் என்று ஆவேசமாக தெரிவித்தார் ,  இந்த பேச்சு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .