thamizisai reply kamals on her tweet says he will not succeed in his career
உலக நாயகன் கமல்ஹாசன் இனி அரசியலைக் கண்டு மிரளும் நாயகன் ஆகப் போகிறார்... என்று கலாய்க்கிறார் பாஜக., தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘உலக நாயகன்’ தவறான கருத்துகளைக் கூறி ’உளறும் நாயகனாக’ மாறி அரசியலில் ’வளரும் நாயகன்’ ஆக கனவு காண்கிறார். ஆனால் அரசியலைக் கண்டு ’மிரளும் நாயகன்’ ஆகப் போகிறார்... என்று ஆரூடம் கூறியுள்ளார்.
அவரது டிவிட்டர் பதிவு:
கமல்ஹாசன் முன்னதாக இந்துக்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர் என்று ஓர் இதழில் எழுதியிருக்கும் தொடர் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அவருக்கு எதிர்ப்பையும் தந்தது.
இந்நிலையில் கமல் நாளை தனது அரசியல் வாழ்வின் முதல் அம்சமாக, கட்சிக்கான நிதியை சேகரிக்க ஒரு மொபைல் ஆப் வெளியிடுகிறார். இந்த ஆப் மூலம், கட்சிக்கு வரும் நிதி முறையாகக் கணக்கிடப் படும் என்று கமல் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக டிவிட்டரில் மட்டுமே குரல் கொடுத்து வந்தவர், பின்னர் ஓரிரண்டு இடங்களில் தலை காட்டினார்.
இருப்பினும், சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையில் வெள்ளம் வந்து மக்கள் பாதிக்கப்பட்டபோது, நேரடியாகக் களத்தில் இறங்காமல், வழக்கம் போல் டிவிட்டர் பதிவிலேயே பதில் சொல்லிக் கொண்டிருந்தார் கமல். இந்நிலையில் அவரது அரசியல் ஆசை பெரிதாக எதையும் சாதிக்காது என்று ஆரூடம் கூறியிருக்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன்.
மேலும், விஸ்வரூபம் படத்தின் போது கமல் நடந்து கொண்ட விதத்தைக் குறிபிட்டு, கேலி செய்யும் விதமாக அவர் கூறியுள்ள இன்னொரு கருத்து....
முன்னதாக, இந்து தீவிரவாதம் என்று கொளுத்திப் போடுவது சுயரூபமா? இல்லை விஸ்வரூபம் 2 புதுப் படம் ஓட வைக்க பொய் விஸ்வரூபமா? - என்று தனது இன்னொரு டிவிட்டில் கேள்வி எழுப்பியிருந்தார்.
- என்று கொளுத்திப் போட்டுள்ளார்.
