நதிநீர்களை இணைக்க மத்திய அரசு நல்ல திட்டம் வைத்திருப்பதாகவும் அதனை பற்றி முதலமைச்சரிடம் விவாதிக்கவே தான் வந்ததாகவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை கிரீன்வேல்ஸ் இல்லத்தில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன்  பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் வானதி சீனிவாசனும் , பாஜக நிர்வாகிகளும், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் உடனிருந்தார். 

இந்த சந்திப்புக்கு பின்  செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்திரராஜன், நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது வருந்ததக்கது எனவும் இனிமேல் இதுபோன்ற விபரீத முடிவுகளை யாரும் எடுக்ககூடாது எனவும் கேட்டுகொண்டார். 

மேலும், நதிநீர்களை இணைக்க மத்திய அரசு நல்ல திட்டம் வைத்திருப்பதாகவும் அதனை பற்றி முதலமைச்சரிடம் விவாதிக்கவே தான் வந்ததாகவும் குறிப்பிட்டார்.