thamilisai comment for Kamal speech

நடிப்பின் மூலம் கஜானாவை நிரப்பிய கமல், தற்போது கஜானா குறிக்கோள் அல்ல என பேசுவதை யாரும் நம்பமாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் வரும் 21 ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார். இதற்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார்.

தொடர்ந்து ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பொதுகூட்டம் நடத்த உள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தனது அரசியல் பிரவேசம், அறிவிப்புகள், கொள்கைகள் உள்ளிட்டவை குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் ரசிகர்களுடம் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில பேசிய கமல், நமது பயணம் வெற்றிகரமாக அமையும் என குறிப்பிட்டார். ஏனென்றால், நாம் கஜானாவை நோக்கி செல்லப்போவதில்லை என்றும், மக்களின் முன்னேற்றத்தை நோக்கிதான் செல்லப் போகிறோம் எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இதற்கு எதிர்வினையாக கருத்து கூறிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை , . திராவிட கட்சிகளுக்கு ஒரே மாற்று சக்தி பா.ஜ.க.,மட்டும் தான் என கூறினார்.

ஊழல் நிறைந்த போக்குவரத்து துறையை லாபகரமானதாக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழிசை வலியுறுத்தினார்.

நடிப்பின் மூலம் தனது கஜானாவை நிரப்பிய கமல், தற்போது கஜானா குறிக்கோள் அல்ல என பேசுவதை யாரும் நம்பமாட்டார்கள் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.