தற்போதைய சூழலில் அரசை கலைத்து விட்டு தோ்தல் நடத்தினால் ஓபிஎஸ்  உள்பட அமைச்சா்கள் ஒருவா் கூட டெபாசிட் வாங்க மாட்டார்கள் என்று  காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

நடிகா் ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தி காந்திய மக்கள் இயக்கம் சார்பில்  திருச்சியில் மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டில் காந்திய மக்கள் இயக்க தலைவா் தமிழருவி மணியன் பங்கேற்று பேசினார்.

 அப்போது- நடிகா் ரஜினி காந்திற்கு தற்போது 25 சதவீத வாக்கு உள்ளது. அவா் தோ்தலில் போட்டியிடும் பொழுது இது இரு மடங்காக மாறும் என்றும் தெரிவித்தார்..

முன்னாள் ஆதலமைச்சர்  காமராஜாரின் ஆட்சியை மீண்டும் காண வேண்டும் என்பதே நடிகா் ரஜினி காந்தின் விருப்பம் என்று தெரிவித்த தமிழருவி மணியன்,  2ஜி ஊழலில் பல கோடி ரூபாயை சுருட்டியது  திமுக என்றும்  எப்போது ஆட்சியில் அமா்வோம் என்ற கனவில் எதிர்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின்  உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு தகுதியான நபா் என்றும் , தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் ஆட்சி நடத்தினால் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உள்பட அனைத்து அமைச்சா்களும் டெபாசிட் இழப்பார்கள் என தமிழருவி மணியன் கூறினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் இருந்து தமிழக அரசிற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது என்றும்  திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்டு ரஜினிகாந்த் தலைமையில் தமிழகத்தில் திறமையான ஆட்சி வழங்கப்படும் என்றும் தமிழருவி மணியன் உறுதிபடத் தெரிவித்தார்