முதலமைச்சர், பொதுச்செயலாளர் ஒருவரே இருக்க வேண்டும் என்று சசிகலா இருக்கும் வரை சொல்லிகொண்டிருந்த அதிமுகவினர் தற்போது எடப்பாடி முதலமைச்சராகவும் சசிகலா பொதுச்செயலாளராக இருப்பது குறித்து தம்பிதுரையிடம் பத்திர்ககையாளர்கள் கேள்வி கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் தட்டிக்கழித்தார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வராக ஓ.பி.எஸ் பொறுப்பேற்றார். அதன்பின்னர் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார்.

இது பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. இரண்டு நாள் கழித்து ஓ.பி.எஸ் தனது எதிர்ப்பை தெரிவித்ததால் கட்சி இரண்டானது.

சிறப்பாக செயல்பட்டுகொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை எதற்காக மாற்ற வேண்டும்? என்ன அவசியம் வந்தது என்று செய்தியாளர்கள் அதிமுக தலைவர்கள் தம்பிதுரை, பண்ரூட்டி ராமச்சந்திரன் செங்கோட்டையன் ஜெயகுமார் உள்ளிட்ட முன்னணி தலைவர்களை கேட்டபோது கட்சியும் ஆட்சியையும் ஒரே தலைமையின் கீழ் இருந்தால் நல்லது என்பதால் ஓ.பி.எஸ்ஸை மாற்றிவிட்டு சின்னம்மாவையே முதல்வராக கொண்டுவர முயற்சிக்கிறோம் என்று தெரிவித்தனர்.

ஆனால் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டு தண்டனை உறுதி படுத்தப்பட்டதால் சிறையில் அடைக்கப்பட்ட அவர் 10 ஆண்டு தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்தனர். இந்நிலையில் முதலமைச்சராக எடப்பாடி பதவியேற்ற பின்னர், செய்தியாளர்களை தம்பிதுரை சந்தித்தார்.

அப்போது, செய்தியாளர்கள் அவரிடம் ஓ.பி.எஸ்ஸை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிய போது கட்சியும் ஆட்சியையும் ஒருவரின் தலைமையின் கீழ் இருக்க வேண்டும் என்பதற்காக நீக்கியதாக தெரிவித்தீர்கள்.

ஆனால் இன்று கட்சிக்கு வேறு ஒருவரும் ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமியையும் தேர்வு செய்துள்ளீர்கள். இதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டனர்.

இதை கேட்டு தடுமாறிய தம்பிதுரை அது வந்து வந்து என இழுத்து அன்றைக்கு சொன்னோம். ஆனால் இன்று அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. அதனால் எடப்பாடியை தேர்வு செய்தோம் என்று அசடுவழிந்தபடி கூறினார்.

என்ன அசாதாரணமான சூழ்நிலை? என்று மீண்டும் செய்தியாளர்கள் கேட்டபோது அசடுவழிய பக்கத்தில் இருந்தவரை பார்த்து சிரித்து கொண்டே பதிலளிக்காமல் சென்றார்.