Thambidurai welcomes Rajinikanth for Politics

ரஜினிகாந்தின் அரசிய சர்ச்சை பேச்சுக்கு கருத்து கேட்டதற்கு, அரசியலில் யார் (ரஜினி) வேண்டுமானாலும் வரலாம் அது அவர்களது ஜனநாயக உரிமை என துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அவர் அளித்துள்ள பேட்டியில், பிரதமர் இல்லத்தில் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது . பிரதமர் புத்தகத்தை வெளியிட்டார். அப்போது மரியாதை நிமித்தமாக பிரதமரை சந்தித்தேன்.

பொதுவான தமிநாட்டின் நலன் குறித்த கோரிக்கைகளை பிரதமரிடம் முன் வைத்துள்ளேன். குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரவு நிலைப்பாடு குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்றார்.

இதனையடுத்து, ரஜினிகாந்தின் அரசிய சர்ச்சை பேச்சுக்கு கருத்து கேட்டதற்கு, அரசியலில் யார் (ரஜினி) வேண்டுமானாலும் வரலாம் அது அவர்களது ஜனநாயக உரிமை. ஆனால் நிர்வாகம் சரி இல்லை என்று ரஜினி கூறியது அவருடைய பார்வை அது தொடர்பாக கருத்து சொல்ல முடியாது. தமிழகத்தில் நல்ல ஒரு ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. ஜெ.அவர்கள் நல்ல ஆட்சியை தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

மேலும், இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்பது தொண்டர்களின் ஆசை அது நிறைவேற அனைத்து முயற்ச்சிகளையும் எடுப்போம். கருத்து வேறுபாடு என்பது கட்சிக்குள் இயல்புதான், என்றார்.